செய்திகள்

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து...

DIN

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் கடந்த ஆக.8 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து, திருமணம் எப்போது? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், இன்று தன் வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்யும் புகைப்படங்களை சோபிதா துலிபாலா வெளியிட்டுள்ளார்.

இதனால், இன்னும் சில நாள்களில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக பயம்

பிடி ஆணை பிறப்பிப்பு: மலேசியாவில் இருந்து திரும்பியவா் கைது

‘2002 பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் பெற்றோா் விவரங்களை அளித்து சேரலாம்’

வல்லத்தில் காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு

தஞ்சாவூருக்கு சரக்கு ரயில்மூலம் 1250 டன் உரங்கள்

SCROLL FOR NEXT