இயக்குநர் சிவா, அஜித், சூர்யா.  
செய்திகள்

சூர்யாவை சந்தித்த அஜித்..! இயக்குநர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன?

நடிகர் அஜித்குமார் இயக்குநர் சிவா குறித்து சூர்யாவிடம் பேசியதாவது...

DIN

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது, நடிகர் சூர்யா, படத்தின் நாயகி திஷா பதானி, நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் வட இந்தியாவில் தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சூர்யா தனது பட புரமோஷனில் கலந்துகொண்டு பேசியதாவது:

நான் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். இப்போது தெரிகிறதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று புரிகிறதே எனக் கூறியதாக பேசினார்.

சிவா நடிகர் அஜித்துடன் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT