பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் போஸ்டர்.  
செய்திகள்

பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் அப்டேட்!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் குறித்த அப்டேட்.

DIN

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி 2989 ஆயிரம் கோடி வசூலித்து அசத்தியது.

தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை மருதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் நாளை (அக்.23) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்.10ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT