ரூ. 200 கோடி வசூலித்த பிரபாஸின் தி ராஜா சாப்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜா சாப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், ஹாரர் பாணியில் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளே ரூ.112 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், 4 நாள்களில் ரூ. 201 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தி ராஜா சாப் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிப். 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date of the film 'The Raja Saab', starring actor Prabhas, has been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.