தி ராஜா சாப் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / தி ராஜா சாப் மூவி.
செய்திகள்

சிரஞ்சீவி படத்தினால் பாதிப்பு? பிரபாஸ் பட வசூல் எவ்வளவு?

நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் வாரத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தினால் இந்தப் பட வசூல் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்‌ஷன், ஹாரர் கலந்த படமாக தி ராஜா சாப் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளில் ரூ.112 கோடி வசூலிக்க, தற்போது முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு 4 நாள்களில் ரூ.190 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படத்திற்கான வரவேற்பினால் பிரபாஸ் பட வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

The first-week box office collection details of actor Prabhas's film 'The Raja Saab' have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: ஒரே குடும்பத்தில் 3 கட்சிகள் சார்பில் 3 வேட்பாளர்கள் - அனைவரும் வெற்றி!

மக்களவை விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தள்ளுபடி!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 687.19 பில்லியன் டாலராக உயா்வு!

அவமானம் - ஆட்ட நாயகி... ஒரே நாளில் மாறிய ஹர்லீன் தியோல் வாழ்க்கை!

பொங்கல் பண்டிகை! கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT