செய்திகள்

பிரதர் படத்தின் புதிய பாடல் விடியோ..!

நடிகர் ஜெயம் ரவி, நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படத்தின் புதிய பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் வெற்றி பெற்ற நகைச்சுவை பாணி இயக்குநராக வலம் வந்தவர்.

இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவு கவனம் பெற்றவை. இன்றுவரை, இவரது ‘நண்பண்டா’ வசனம் நண்பர்களுக்கு இடையேயான பேச்சுகளில் இடம்பெறத் தவறுவதில்லை.

தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘மக்காமிஷி’ பாடல் மிகவும் புகழ்பெற்றது.

படத்தின் இறுதிகட்ட இசைக் கோர்ப்புகள் நடந்து வருவதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுஸ்ரீ குரலில் மெதக்குது காலு ரெண்டு எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT