முகப்பு
செய்திகள்

காஷ்மீர் படப்பிடிப்பில் சந்தித்த பிரச்னைகள்..! விடியோ வெளியிட்ட அமரன் படக்குழு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் மேக்கிங் குறித்து படக்குழு பகிர்ந்த விடியோ..

Updated On : 26 அக்டோபர், 2024 at 2:21 PM
ராஜ்குமார் பெரியசாமி, காஷ்மீர் படப்பிடிப்பு காட்சி, சிவகார்த்திகேயன் .
பகிர்:

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

படத்தின் சிறப்புக் காட்சி தில்லியில் உள்ள இந்திய ராணுவத்துக்கு திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

தற்போது, காஷ்மீர் படப்பிடிப்பு குறித்தும் அதன் சிரமங்கள் குறித்தும் படக்குழு பேசிய விடியோ வெளியாகியுள்ளது.

இந்த விடியோவில் பயங்கரவாதிகள் பாதிப்பு இருந்ததால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.