செய்திகள்

பின்னணி இசைக்காக யூடியூப் சேனல் துவங்கிய இளையராஜா!

புதிய யூடியூப் சேனல் துவங்கிய இளையராஜா...

DIN

பின்னணி இசைக்கான யூடியூப் சேனலை துவங்கியுள்ளார் இளையராஜா.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான ஜமா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிக்க: 11,500 திரைகளில் புஷ்பா - 2?

விரைவில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பும் துவங்கவுள்ளது. இதற்கிடையே, இசைக் கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தான் இசையமைத்த திரைப்படங்களில் இடம்பெற்ற பின்னணி இசைகளை பதிவேற்ற அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை துவங்கியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சேனலுக்கு இளையராஜா பிஜிஎம்’எஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பனிமூட்டம்!

தில்லியில் 81 புதிய சுகாதார மையங்கள் தொடக்கம்!

விஜய்யின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்! ரவி மோகன்

பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் காப்பீடு நிறுவனத்தில் பயிற்சி!

களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT