செய்திகள்

’கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ ஓடிடியில் வென்ற மெய்யழகன்!

மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

மெய்யழகன் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.

நடிகர் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, நேற்று (அக்.25) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானதிலிருந்து இந்தியளவில் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. திரையரங்கில் சென்று பார்த்திருக்கலாம் என்றும் பல இடங்களிலும் கண்ணீரை வரவழைத்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ரசிகர்களும் படத்தைப் பாராட்டியுள்ளனர். முக்கியமாக, அர்விந்த் சாமி தன் தங்கையின் காலில் கொலுசு மாட்டும் காட்சியை சிலாகித்து குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT