பிக் பாஸ் வீட்டில் செளந்தர்யாவுடன் விஜே விஷால் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வாரம் அணிமாறும் இருவர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து ஒருவரும் பெண்கள் அணியிலிருந்து ஒருவரும் அணி மாறினர்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து ஒருவரும் பெண்கள் அணியிலிருந்து ஒருவரும் அணி மாறினர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் இரு அணிகளில் இருந்து ஒவ்வொரு நபர் மற்ற அணிகளுக்குச் சென்று விளையாட வேண்டும்.

அந்தவகையில் 4வது வாரத்தில் இம்முறை பெண்கள் அணியிலிருந்து செளந்தர்யாவும், ஆண்கள் அணியிலிருந்து விஜே விஷாலும் அணிமாறிச் சென்றனர்.

பெண்கள் அணியில் கடந்த வாரம் சாச்சனாவும், ஆண்கள் அணியில் ஜெஃப்ரியும் அணிமாறிச் சென்றிருந்தனர். அவர்கள் இம்முறை அவர்களின் சொந்த அணிக்குத் திரும்ப, செளந்தர்யாவும் விஜே விஷாலும் அணிமாறிச் சென்றனர்.

பெண்கள் அணியில் உள்ள ஜாக்குலின், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, அன்ஷிதா என யாருமே ஆண்கள் அணிக்குச் செல்ல ஆர்வம் காட்டாததால், செளந்தர்யா அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணிக்குச் செல்ல ஆர்வமுடன் இருக்கும் செளந்தர்யா, இம்முறை வாய்ப்பு கிடைத்தும் ஏன் போகிறோம்? என்பதைப் போன்று உணர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார்.

செளந்தர்யா கடந்த மூன்று வாரங்களிலும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றார். பிக் பாஸ் வீட்டில் அவர் ஆக்கப்பூர்வமாக விளையாடவில்லை என பெண்கள் அணியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

நாமினேஷனில் இருந்தபோதும் மக்களின் வாக்குகளைப் பெற்றதால் அவர் வெளியேற்றப்படவில்லை. இம்முறை அவர் ஆண்கள் அணிப்பக்கம் அனுப்பப்பட்டுள்ளார். இதனால், இம்முறை அவர் மற்ற அணியினரைக் கவரும் வகையிலான விளையாட்டை வெளிப்படுத்துவார் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT