நடிகை நிவேதா தாமஸ். 
செய்திகள்

ஹேமா கமிட்டி அறிக்கை வருத்தம் அளிக்கிறது: நிவேதா தாமஸ்

DIN

நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார்.

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது, ’35 சின்ன கதகாடு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து காட்சிகளில் நடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா தாமஸ்.

இந்த நிலையில், மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசிய நிவேதா தாமஸ், ‘ஹேமா கமிட்டி அறிக்கை உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. வீட்டிலிருப்பதைவிட பணியிடத்தில்தான் பெண்கள் அதிக நேரம் இருக்கின்றனர். அதனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம். ஹேமா கமிட்டிபோல் மற்ற துறைகளிலும் கமிட்டிகள் வந்தால் நன்றாக இருக்கும்." எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT