செய்திகள்

வசூல் சாதனை செய்வாரா விஜய்?

கோட் அதிக திரைகளில் வெளியாகிறது.

DIN

விஜய்யின் கோட் திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தின் புரமோஷன் நேர்காணல்களால் விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் ஆந்திரத்திலும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.75 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது.

தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.

மேலும், முன்பதிவுகளிலும் பெரிய சாதனையைப் புரியவுள்ளது. காரணம், விஜய் முழுநேர அரசியலுக்குள் வந்தபின் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால், விஜய்யின் பெரிய கமர்சியல் திரைப்படம் இதுதான் என்பதால் எப்படியாவது முதல்நாளிலேயே கோட் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல காட்சிகள் திரையிடப்பட உள்ளன. விஜய்யின் அதிகம் வசூலித்த திரைப்பட வரிசையில் முதலிடத்தில் லியோ (ரூ. 620 கோடி) இருக்கிறது. கோட் வெளியாகும் திரைகளின் எண்ணிக்கையையும், காட்சிகளையும் கணக்கிடும்போது லியோவின் வசூலை முறியடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT