இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்த பதிவு.  படம்: இன்ஸ்டா / யுவன்
செய்திகள்

தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்ததுக்கு நன்றி: யுவன் நெகிழ்ச்சி!

கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் இன்று (செப்.5) கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா 2ஆவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். தொடக்கத்தில் பாடல்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் இறுதிக் கட்டத்தில் வெளியான பாடல்களும் டிரைலரில் வந்த பின்னணி இசையும் வரவேற்பு பெற்றன.

கோட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் யுவனின் இசையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

உங்களது அன்புக்கு நன்றி மக்களே. தளபதிக்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா கல்பாத்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இது எனது சகோதரர் வெங்கட் பிரபு இல்லாவிட்டால் நடந்திருக்காது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT