முகப்பு
செய்திகள்

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி!

நடிகை தீபிகா படுகோன் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 7:44 AM
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்.
பகிர்:

நடிகை தீபிகா படுகோன் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் திபீகா படுகோன். தமிழில், கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, பான் இந்தியப் படங்களில் நடித்து வருகிறார்.

2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி வெளியாகியிருந்தது.

கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோன்.

இதற்கிடையே, தீபிகா கருவுற்றார். அதனால், இந்தாண்டு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருக்கிறார். இம்மாத இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொன்னதால், தன் கணவருடன் நிறைமாத புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (செப். 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்றைய நாள் குழந்தை பிறந்தால் நல்ல நேரம் என்பதைக் கணக்கிட்டு மருத்துமனைக்குச் சென்றிருக்கிலாம் என்றும் நேற்றே சீசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.