இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள். 
செய்திகள்

ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் இடையே கைகலப்பு

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது.

DIN

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது.

கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹிப் ஹாப் ஆதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது இருத்தரப்பு இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு காவல்துறையினர் அங்கு வந்து கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்களை வெளியேற்றினர். தற்போது இந்த விடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் அதிகம் கூடும்போது பிரச்னைகள் எழுவதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை போல 300 அடி ரேம்ப் அமைத்து ஹிப் ஹாப் ஆதி அதில் நடந்து வந்து பாட்டு பாடி நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

SCROLL FOR NEXT