நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் அமரன், சிம்புவின் - 48வது படம், தக் லைஃப் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது.
நீண்ட காலமாக தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த கமல்ஹாசன், விக்ரம் வெற்றிக்குப் பின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.