த்ரிஷா. 
செய்திகள்

வைரலான நடனம்... உற்சாகத்தில் த்ரிஷா!

த்ரிஷா ஆடிய மட்ட பாடலை ரீல்ஸ் செய்து வருகின்றனர்..

DIN

கோட் திரைப்படத்தில் விஜய்யுடன், த்ரிஷா நடனமாடிய பாடல் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இதற்கிடையே, நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார். காரணம், படத்தில் இடம்பெற்ற, ‘மட்ட’ பாடலில் நடிகர் விஜய்யுடன் நடனமாடியதுதான்.

குறிப்பாக, மஞ்சள் புடவையில் ’கில்லி - அப்படிபோடு’ பாடலில் ஆடிய நடன அசைவுகளை விஜய்யும் த்ரிஷாவும் இப்பாடலிலும் மறு ஆக்கம் செய்துள்ளனர். இது, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராமிலும் த்ரிஷாவின் நடனத்தை ரீல்ஸ் செய்யத் துவங்கிவிட்டனர். யாரெல்லாம் சிறப்பான ரீல்ஸ்களை செய்கின்றனரோ அவர்களின் விடியோவை த்ரிஷா தன் இன்ஸ்டா கணக்கில் உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆற அமர... சாரா யஸ்மின்!

SCROLL FOR NEXT