மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப். 
செய்திகள்

மலையாளத்தில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்..! பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!

பிரபல பாலிவுட் இயக்குநர் மலையாளத்தில் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன.

சன்னிலியோன் நடித்துள்ள கென்னடி படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

நடிப்பில் அசத்தும் அனுராக் காஷ்யப்

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலையாள படத்தில் நடித்துள்ளார். ஆஷிக் அபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரைபிள் கிளப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் அனுராக் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் சமீபத்தில் பிரபலமான ராப் பாடகரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT