முகப்பு
செய்திகள்

மகளுடன் தீபிகா படுகோன்? வைரலாகும் போலி புகைப்படம்!

தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது...

Updated On : 10 செப்டம்பர், 2024 at 10:59 AM
பகிர்:

நடிகை தீபிகா படுகோனின் போலி புகைப்படம் வைரலாகியுள்ளது.

மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக நடிகை தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை தீபிகாவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தொடர்ந்து, இந்தியளவில் பல ரசிகர்கள் தீபிகா படுகோனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தீபிகா தன் குழந்தையுடன் இருக்கும் போலி புகைப்படங்களையும் பலர் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஏஐ வளர்ச்சியால் நடிகைகளின் போலி விடியோக்கள் உருவாக்கப்பட்டு வந்தது.

தற்போது, வைரலுக்காக பிரபல நடிகை குழந்தையுடன் இருப்பதை ஏஐ உதவியால் போலியாகச் சித்திரித்து இணையத்தில் வெளியிட்டது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →