ஜூனியர் என்டிஆரின் தேவரா டிரைலர்!
தேவரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது, ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். தேவரா செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் கவனம் பெற்ற நிலையில், தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதிரடியான சண்டைக்காட்சிகளால் உருவான இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.