மாரி செல்வராஜ் 
செய்திகள்

முஸ்லிம் நண்பர்களை புறக்கணித்தேனா? வாழை 2 உறுதி..! மாரி செல்வராஜ் அதிரடி!

இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை படத்தின் இரண்டாம் பாகம் வருமென கூறியுள்ளார்.

DIN

இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை படத்தின் இரண்டாம் பாகம் வருமென கூறியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஆக.23இல் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சிலர் முஸ்லீம்களை புறக்கணித்ததாகவும் விமர்சித்தார்கள்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஓடிடியில் வாழை

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

இந்தப்படம் செப்.27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழை 2

இந்நிலையில், நேற்று (செப்.16) நடைபெற்ற வாழை படத்தின் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:

மாரி செல்வராஜ் யாரென்று தெரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம்தான் வாழை. இதிலும் புரியவில்லை என்றால் இன்னமும் விரிவாக எடுக்க வேண்டியுள்ளது. இன்னமும் சொல்ல கதைகள் ஏராளமாக உள்ளன. நிச்சயமாக வாழை 2 படம் வரும். சிவனைந்தனை வைத்தே அதையும் எடுப்பேன்.

இஸ்லாமிய நண்பர்களுக்கு நன்றி

விபத்தில் இருந்து காப்பாற்றிய இஸ்லாமிய நண்பர்களுக்கு நன்றி. நான் அவர்களை வேண்டுமென்றே காட்டாமல் இல்லை. அவர்களை குறித்து காட்டியிருந்தால் அது வேறுபடமாக இருந்திருக்கும்.

இந்தப்படம் எனக்கும் எனது தாயுக்குமான உறவை சொல்லவந்த படம். அந்த விபத்தில் மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள். இஸ்லாமிய நண்பர்களுக்கும் நன்றி. சாதி மதம் பார்க்காது உதவிய அத்தனை தமிழ்ச்சமூக மக்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றிதான் உங்களுக்கான நன்றி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT