பிருத்விராஜ் 
செய்திகள்

ரூ.30 கோடிக்கு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் மும்பையில் ரூ.30 கோடிக்கு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

DIN

நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் கேரள மாநில அரசின் பல விருதுகளைப் பெற்றன.

சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் நிகிலா விமல், பாசில் ஜோசப், யோகி பாபு உடன் பிருத்விராஜ் நடித்திருந்தார்.

இந்தாண்டு வெளியான இந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, மீண்டும் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து படம் எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விபின் தாஸ் தெரிவித்திருந்தார்.

சலார் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் மிரட்டுகிறார் பிருத்விராஜ். தற்போது எல்2 எம்புரான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் ரூ.30.6 கோடி மதிப்பிலான இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

மும்பை, பந்த்ராவில் வாங்கியுள்ள இந்த இடம் 276 சதுர மீட்டர் ( 2,971 சதுர அடி) கொண்டது. இதில் 4 கார் பார்க்கிங் வசதி இருக்கிறது. செப்.12ஆம் தேதி இந்த இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்தியில் படம் நடிக்க உள்ளதால் இந்த இடம் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கடுத்து சலார் 2- சௌர்யங்க பர்வம் படம் தயாரிப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT