கோட் பட போஸ்டர் 
செய்திகள்

கோட்: 13 நாள்களில் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் 13 நாள்களில் எவ்வளவு வசூலித்ததென படக்குழு அறிவித்துள்ளது.

DIN

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

கோட் திரைப்படத்தினால் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், 13 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.413 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லியோ திரைப்படம் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. லியோ வசூலினை கோட் முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகிபாபு நடித்துள்ளார்கள். பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருப்பார். சிவகார்த்திகேயன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? -இபிஎஸ் கண்டனம்

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரி மனு! உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சக்கர நாற்காலியில் வந்து வெற்றியைக் கொண்டாடிய பிரதிகா!

கூல்... மகிமா நம்பியார்!

தெருநாய்கள் விவகாரம்: நவ 7-ல் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT