ஜானி மாஸ்டர் 
செய்திகள்

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பாலியல் வன்கொடுமையில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல். 2020இல் மும்பைக்கு செல்லும்போது இது முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதை வெளியே சொல்லக்கூடாதென மிரட்டி பின்னர் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் ஜானி மாஸ்டர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் (21) அளித்த புகாரில் கடந்த செப்.17ஆம் தேதி ஹைதாராபாத் ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கோவாவில் வைத்து கைது செய்தனர். ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்

இந்நிலையில், அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, “இதெல்லாம் எனது கணவர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல். அருவருக்கத்தகக் குற்றச்சாட்டு. திட்டமிட்ட சதி.

பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணிடம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா?” எனக் கூறியிருந்தார்.

யார் இந்த ஜானி மாஸ்டர்?

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா.

அல்லு அர்ஜூனின் 'புட்ட பொம்மா...' புஷ்பா பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநரும் இவரே ஆவார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா..' பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருது வென்றிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT