தனுஷ், ஷாலினி பாண்டே. 
செய்திகள்

தனுஷ் படத்தில் ஷாலினி பாண்டே!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் ஷாலினி பாண்டே இணைந்துள்ளதாக தகவல்.

DIN

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.

தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ’இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இட்லி கடை போஸ்டர்.

இந்தப் படத்தில் ஷாலினி பாண்டே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், அருண் விஜய், அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த ஷாலினி பாண்டே?

அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஷாலினி பாண்டே

தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஷாலினி பாண்டேவின் 2 புதிய இணையத் தொடர்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவசரகதியில் கோவை செம்மொழி பூங்கா திறப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

துல்கர் சல்மானின் ஐயம் கேம் முதல் பார்வை போஸ்டர்!

தனுஷ் - 55 தயாரிப்பிலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்!

ஜாதகத்தில் கிரக அமைப்புகள் செல்வ வளர்ச்சியை எப்படி பாதிக்கின்றன?

SCROLL FOR NEXT