ஜெயம் ரவியுடன் கெனிஷா. 
செய்திகள்

நட்பிலும் அதீத அன்பு உண்டு... கெனிஷா!

ஜெயம் ரவி - கெனிஷா விவகாரம்...

DIN

நடிகர் ஜெயம் ரவியுடான உறவு குறித்து கெனிஷா பதிலளித்துள்ளார்.

பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருந்ததால்தான் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிந்தார் என வதந்திகள் பரவின. தொடர்ந்து, பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, “நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள்.

தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹீலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள். நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.” எனக் கூறினார்.

ஜெயம் ரவி பேசிய வார்த்தையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கெனிஷா அதற்கு நன்றி தெரிவித்ததுடன், ‘நட்பிலும் அதீத அன்பு உண்டு... அதை மக்கள் மறந்துவிடுகின்றனர்’ என்கிற வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் நட்புடன் இருப்பதைக் கூறினாலும் ரசிகர்கள் தொடர்ந்து கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரையும் இணைத்துப் பேசி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT