செய்திகள்

மனவேதனையாக இருக்கிறது... வேள்பாரி நாவலைக் குறிப்பிட்டு ஷங்கர் எச்சரிக்கை!

வேள்பாரி நாவலவைக் குறிப்பிட்டு ஷங்கர் எச்சரிக்கை...

DIN

இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவல் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டிற்குள் இவ்விரு படங்களும் முழுமையடையும் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

அதில்,”அனைவரின் கவனத்திற்கு... பலரும் சு. வெங்கடேசனின் நாவலான ’வீரயுக நாயகன் வேள்பாரி’யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன்.

நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும், ஷங்கர் குறிப்பிட்ட அந்த சமீப டிரைலர், தேவரா படமா அல்லது சூர்யாவின் கங்குவாவா அல்லது ரஜினியின் வேட்டையனா எது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்!

ஆமிர் கான் தயாரிப்பில் பாலிவுட்டில் களமிறங்கும் சாய் பல்லவி!

SCROLL FOR NEXT