தும்பட் திரைப்படம் மறுவெளியீட்டிலும் அசத்தி வருகிறது.
இயக்குநர்கள் ஆனந்த் எல். ராய் மற்றும் ஆனந்த் காந்தி தயாரிப்பில் ரகி அனில் பார்கே இயக்கத்தில் உருவான திரைப்படம் தும்பட் (tumbbad).
சுதந்திர காலத்திற்கு முன் தங்கப் புதையலைத் தேடிச்செல்லும் நாயகன் (சோஹம் ஷா) எதிர்கொண்ட பிரச்னைகளை மையமாகக் கொண்டு ஹாரர் பாணியில் இப்படம் உருவானது.
2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீட்டில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனால், பலரும் படத்தை மறுவெளீயிடு செய்ய கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த செப். 13 ஆம் தேதி இந்தியளவில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் மறுவெளீடானது.
மறுவெளியீட்டில் இதுவரை ரூ. 21. 57 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுவெளியீடாகும் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. விதிவிலக்காக நடிகர் விஜய்யின் கில்லி ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, தும்பட் படமும் மறுவெளியீட்டில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.