நடிகர் தினேஷ். 
செய்திகள்

கெத்து தினேஷ்..! பிரபலங்களின் வாழ்த்து மழையில் நடிகர் தினேஷ்!

நடிகர் தினேஷ் பிறந்தநாளில் சினிமா பிரபலங்கள் கெத்து தினேஷ் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

DIN

அட்டக்கத்தி படத்தில் நாயகனாக அறிமுகமானதால் அட்டக்கத்தி தினேஷ் என அழைக்கப்பட்ட தினேஷ் தற்போது லப்பர் பந்து பட வெற்றியினால் கெத்து தினேஷாக மாறியுள்ளார்.

அட்டக்கத்தி, குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என நல்ல படங்களில் நடித்துள்ளார் தினேஷ்.

பச்சமுத்து தமிழரசன் இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தினேஷ். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தினேஷுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண், “நீங்கள் எப்பவும் கெத்துதான். பிறந்தநாள் கெத்து தினேஷ்ணா. லவ் யூ” எனக் கூறியுள்ளார்.

தண்டகாரண்யம் எனும் படத்தில் தினேஷ் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரைம் நடிகர் கலையரசன் என படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT