செய்திகள்

கேம் சேஞ்சர் 2-வது பாடல் புரோமோ!

கேம் சேஞ்சர் புதிய பாடல் அப்டேட்....

DIN

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக, தமன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலின் புரமோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நகாஸ் ஆசிஸ் பாடியுள்ளார். பாடல் வருகிற செப். 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது.

பாடல்களைத் தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படம் டிச. 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT