நடிகர் ஜெயம் ரவி. 
செய்திகள்

மும்பைக்குக் குடியேறும் ஜெயம் ரவி?

DIN

நடிகர் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி மனைவியைப் பிரிவதாக அறிவித்ததிலிருந்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக, பிரபல பாடகி ஒருவரால்தான் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே பிரிவு ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கும் இதற்கும் தொடர்பில்லையென ஜெயம் ரவி விளக்கமளித்தார். மேலும், தன் மனைவி வீட்டிலுள்ள தன் பொருள்களை மீட்டுத்தருமாறு காவல் ஆணையரிடம் புகாரும் அளித்தார்.

சொந்த வாழ்க்கைக்கு இடையே, தன் திரைப்பட பணிகளிலும் ஜெயம் ரவி முழுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இவர் நடித்துள்ள பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கின்றன. முதலில் பிரதர் வெளியீட்டைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை வெளியாகும் எனத் தெரிகிறது.

அதேநேரம், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் ஜீனி படத்திலும் தீவிரமாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இம்மூன்று படங்களும் வெளியாகலாம்.

இந்த நிலையில், ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, அவர் அலுவலத்தை அமைத்துவிட்டதாகவும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த விரைவில் முழுமையாகக் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா மும்பைக்குக் குடும்பத்துடன் குடியேறியத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் செல்வது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT