முகப்பு
செய்திகள்

குடும்பத்தினருடன் வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் ரோட்டர்டம் திரை விழாவில் தன் குடும்பத்துடன்  கலந்துகொண்டார்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
பகிர்:

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்  விஜய் சேதுபதி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

இந்நிலையில், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ’லைம்லைட்’ திரையிடலுக்கு விடுதலை - 1, விடுதலை - 2 படங்கள் திரையிடப்பட்டன. படத்தைக் கண்ட பலரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

#Viduthalai Part-1 & Part-2 received a standing APPLAUSE of 15 MINS from the audience after screening

Seems VetriMaaran has done something in Part-2 (Portions so far completed) pic.twitter.com/6GYOJtY737

— AmuthaBharathi (@CinemaWithAB) February 1, 2024

இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தற்போது, ரோட்டர்டமில் தன் குடும்பத்தினருடன் வெற்றிமாறன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் நெதர்லாந்தை ரசித்துக்கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்!

முழு கட்டுரையைப் படிக்க →