முகப்பு
செய்திகள்

மகன்களுடன் நயன்தாரா!

தன் மகன்களுடன் இருக்கும் புதிய விடியோவைப் பகிர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா.

Updated On : 11 பிப்ரவரி 2024, 4:10 pm IST
பகிர்:

மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

ஒரு படத்திற்கு ரூ.8 கோடியிலிருந்து ரூ.12 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா, சமீபத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அப்படம், அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து, அன்னபூரணி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

மேலும், சம்பாதிக்கும் பணத்தை தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நம்பகமான தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார். இந்த இணைக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக, எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் தன் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிடுகிறார் நயன்தாரா.

தற்போது, தன் மகன்களுடன் இருக்கும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.