முகப்பு
செய்திகள்

அசோக் செல்வனின் சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி!

நடிகர் அசோக் செல்வனின் சபா நாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2024 at 2:55 PM
பகிர்:

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்தாண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் மிகுந்த வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணமும் செய்தார்.  

சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

புயலின் காரணமாக படம் தள்ளிபோனது. பின்னர்  டிச.22ஆம் தேதி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படமும் இன்று (ஜன.25) வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →