திருமணக் கோலத்தில் அனுபமா!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணத் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அனுபமா படமேஸ்வரன் நடித்திருக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: சினிமாவில் 15 ஆண்டுகள்! விஷ்ணு விஷால் உருக்கம்!
இத்திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடல் வெளியானது.
தொடர்ந்து, நடிகை அனுபமா இப்படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்தார். புடவையில் திருமணக் கோலத்தில் இருக்கும் அனுபமாவின் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.