சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் அடிப்படையில், தமிழ்நாட்டின் சிறந்த தொடர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில், சன் தொலைக்காட்சிகளின் தொடர்களை பின்னுக்குத்தள்ளி விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறகடிக்க ஆசை தொடரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகிவந்த நிலையில், டிஆர்பியிலும் மற்றத் தொடர்களை முந்தியுள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பார்க்கப்படும் தொடர் எவை என்பது குறித்து வாரமொருமுறை வெளியாகும் டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அந்தவகையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியின் தொடர்களான கயல், சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு போன்ற தொடர்களே முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவந்த நிலையில், அவற்றை சிறகடிக்க ஆசை தொடர் முந்தியுள்ளது.
கோமதி பிரியா - வெற்றி வசந்த் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் இத்தொடரில் நடிக்கின்றனர். திருமதி செல்வம் தொடரை இயக்கிய குமரன், இத்தொடரை இயக்குகிறார்.
கயல்
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. எதிர்பாராத திருப்பங்களாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளாலும் கயல் தொடர் மக்களைக் கவர்ந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டி நாயகியாகவும், சஞ்சீவ் கார்த்திக் நாயகனாகவும் நடிக்கின்றனர்.
சிங்கப்பெண்ணே
சிங்கப் பெண்ணே தொடர் 3வது இடத்தில் உள்ளது. இதில் ஆனந்தி என்ற பாத்திரத்தில் நடித்துவரும் ஆனந்தி, தனது வசீகரமான தோற்றத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் மக்களைக் கவர்ந்துள்ளார். கிராமத்தில் இருந்து குடும்ப வறுமை காரணமாக நகரத்துக்கு குடிபெயர்ந்து பின்னலாடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நாயகிக்கு உதவிகரமாக அவரின் மேற்பார்வையாளராக வரும் நாயகன், பெண் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளார். இதனால் இத்தொடருக்கான வரவேற்பு குறையாமல் உள்ளது.
மூன்று முடிச்சு
மூன்று முடிச்சு தொடர் 4வது இடத்தில் உள்ளது. கதைக்களத்தில் உள்ள டிராமா, ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. நாயகி ஸ்வாதி கொண்டேவின் நடிப்பும் உணர்வுப்பூர்வமாக கதைக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளதால் இத்தொடரின் மீதான சுவாரசியம் மக்களுக்குக் குறையாமல் உள்ளது. இத்தொடரில் நியாஸ் கான் நாயகனாக நடிக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தொடர் 5வது இடத்தில் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது அதிக ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் தொடராக பாக்கியலட்சுமி உள்ளது. கதை நீண்டுக்கொண்டே சென்றாலும், கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக ரசிகர்களை இத்தொடர் கவர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்த சக தொகுப்பாளினிகள்! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.