செய்திகள்

அதிக திரைகளில் வெளியாகும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்!

கராத்தே கிட்ஸ் லெஜண்ட்ஸ் குறித்து...

DIN

நடிகர் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் அதிக திரைகளில் வெளியாகிறது.

நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி கராத்தே கிட் (The karate kid).

தற்போது, இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி ஜான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் ஆங்கில டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளின் டிரைலர்களும் கவனம் ஈர்த்தன.

இப்படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் மே 30 ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதில், அமெரிக்காவில் 3500 - 5000 திரைகளிலும் கனடாவில் 900க்கும் மேற்பட்ட திரைகளிலும் படத்தை வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

அதனைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் இந்தியாவில் இப்படம் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT