செய்திகள்

நானியின் ஹிட் 3: முதல் பாடல்!

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இறுதியாக வெளியான ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நானி ஹிட் - 3 திரைப்படத்தில் நடித்து முடித்தார். வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படம் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் மிக்கி ஜே மேஜர் இசையில் தமிழில் கார்த்தி குரலில் முதல் பாடலான ’காதல் வெல்லுமா’ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT