முகப்பு
செய்திகள்

ஜாலியன் வாலாபாக் படுகொலை வழக்கு படத்தின் டிரைலர்!

கேசரி - 2 படத்தின் டிரைலர்...

Updated On : 3 ஏப்ரல், 2025 at 10:43 AM
பகிர்:

அக்‌ஷய் குமார், மாதவன் நடிப்பில் உருவான கேசரி - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அனுராக் சிங் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த கேசரி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமானது. பிரிட்டிஷ் இந்தியா காலகட்ட கதையாக இப்படம் உருவாகியிருந்தது.

தற்போது, கரண் சிங் தியாகி இயக்கத்தில் கேசரி - 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் மாதவன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1919 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் பொதுமக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை தாக்குதலின் வழக்கை விசாரிக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

படுகொலையை நிகழ்த்திய, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தளபதியான ஜெனரல் டயரை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.