மகளுடன் ரெடின் கிங்ஸ்லி. 
செய்திகள்

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சின்ன திரை நடிகையுமான சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனந்த ராகம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக் கிளி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர்.

தொடர்ந்து திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பெரிய திரையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் அஜித்தின் வலிமை உள்ளிட படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சங்கீதா, சினிமா காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனிடையே ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியினர் தாங்கள் கருவுற்று இருப்பதாக முன்னதாக அறிவித்து இருந்தனர்.

சில நாள்களுக்கு முன்பு இவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில்,"அனைவரது வாழ்த்துகளுடன் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெரிய திரை, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT