புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!
சின்ன திரை நடிகை ஜனனி அசோக்குமாரின் நீண்டநாள் கனவு நனவானது குறித்து...
சின்ன திரை நடிகை ஜனனி அசோக்குமார் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தனது நீண்ட நாள் கனவான இனிப்பகத்தின் முதல் கிளையை சென்னையில் திறந்துள்ளார்.
சின்ன திரையில் பல்வேறு தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜனனி அசோக்குமார். தொடக்கத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்ன திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து மாடலிங் செய்துகொண்டு விளம்பரம் பரங்களில் நடித்துக்கொண்டிருக்குபோது, விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் வில்லியாக நடித்து அங்கீகாரம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இதயம் தொடரில் குழந்தைக்கு அம்மாவாக நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார். தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் ஜனனி நடித்து வருகிறார்.
தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்புத் திறமையாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜனனி, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
தற்போது சொந்தமாகத் தொழில் தொடங்கி, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் இனிப்பகத்தைத் திறந்துள்ளார். திறப்பு விழாவில் சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
நடிகை ஷபானா, ஆர்யன் உள்ளிட்ட பலர் ஜனனியின் புதிய கடைக்கு வருகைப்புரிந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். புதிதாக இனிப்பகத்தை தொடங்கியுள்ள ஜனனிக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Serial actress Janani ashokkumar has started a new business
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.