நடிகர் பிரசாந்த் - இயக்குநர் ஹரி  
செய்திகள்

பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் இணைகிறதா?

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல்.

DIN

நடிகர் பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு அந்தகன், தி கோட் போன்ற இரு திரைப்படங்கள் வெளியாகின.

அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, தி கோட் படத்திலும் அவரது நடிப்பும் நடனமும் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரசாந்தின் 55-வது படமாகும்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இந்தப் படத்திற்கான அறிவிப்பை பிரசாந்த் பிறந்தநாளான ஏப். 6 அன்று படக்குழு வெளியிட இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்தப் படத்தில் கதாநாயகியாக கயாது லோஹர், பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டில் பிரசாந்த் இரு படங்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கான அறிவிப்புகள் அவரது பிறந்தநாளன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT