இளையராஜா 
செய்திகள்

3 மாதங்கள் சூப் மட்டுமே... இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தன் உணவுக் கட்டுபாடு குறித்து இளையராஜா...

DIN

இசையமைப்பாளர் இளையராஜா தன் உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ளார்.

இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படுகிற இளையராஜா 82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது கலையின் மீது அவருக்கிருக்கும் ஈடுபாட்டின் அடையாளம் என்றாலும் நம்முடைய உணவுப் பழக்கங்களும் அன்றாட வாழ்வில், செயலில், சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இளையராஜா பல ஆண்டுகளாக அதிகாலையிலேயே எழுந்து தன் இசைப்பணிகளைச் செய்பவர் என்பதால் அவருடைய உணவுப்பழக்கம் மற்றும் நேர மேலாண்மை குறித்து பலருக்கும் ஆச்சரியம் உண்டு.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜாவிடம், “இளவயதில் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கலாம். ஆனால், நன்றாக வசதி வந்த பிறகும் இவ்வளவு சாப்பிட்டால் போதும் என நினைப்பது பெரிய சவால். அதை எப்படி கடைப்பிடிக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு இளையராஜா, “ஆன்மீகத்தில் ஈடுபாடு வந்த பிறகு விரதம் இருப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. மூன்று மாதங்கள் வரை எதுவுமே சாப்பிடாமல் ஒருவேளை ஆகாரமாக சூப் மட்டுமே குடித்திருக்கிறேன். அது உடலை சுறுசுறுப்பாகவும் வைத்திருந்தது. வேலை என வந்தால் உணவுமேல் கவனம் இருக்காது.

சாப்பிட்ட காலத்தில் நன்றாக சாப்பிட்டேன். ஆனால், இப்போது ஒரு இட்லி, சில பப்பாளி துண்டுகள்தான் காலை உணவு. பொதுவாக, மக்களுக்கு கஷ்டமாக இருப்பது எனக்கு கடினமானதாக இருக்காது. ஏனென்றால், நான் அவற்றை கடினம் என நினைப்பதில்லை. நான் காட்டாறு; எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT