செய்திகள்

நீதிபதி மகனைத் தாக்கிய வழக்கு: தர்ஷனுக்கு ஜாமீன்!

நடிகர் தர்ஷன் கைதான வழக்கு குறித்து...

DIN

நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகா் தா்ஷன், சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவா் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாா். மேலும், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தா்ஷன் நடித்து வருகிறாா்.

சில நாள்களுக்கு முன் தா்ஷன் வீட்டின் முன்பு உயா்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் அருகிலிருந்த டீக்கடையில் இருந்திருக்கிறார். வெகுநேரம் வீட்டின் முன்பு காா் நிறுத்தப்பட்டிருந்ததால், அதை எடுக்குமாறு தா்ஷன் கூறினாராம்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த நீதிபதியின் மகன், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக தா்ஷனை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதேவேளையில் தா்ஷன் கொடுத்த புகாரின்பேரில், நீதிபதியின் மகன் தரப்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தர்ஷன் கொடுத்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அவருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

SCROLL FOR NEXT