தனுஷ் பாடிய பாடல் அனைவரையும் மயக்கும்: அருண் விஜய்
ரெட்ட தல பாடல் குறித்து அருண் விஜய்...
செய்திகள்தனுஷ் பாடிய பாடல் அனைவரையும் மயக்கும்: அருண் விஜய்
ரெட்ட தல பாடல் குறித்து அருண் விஜய்...
ரெட்ட தல படத்தில் நடிகர் தனுஷ் பாடிய பாடல் மனதை மயக்குமென நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். ’
சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் அருண் விஜய், ”உற்சாகமாக இருக்கிறது. சகோதரர் தனுஷ் பாடிய ரெட்ட தல பாடலை நீங்கள் எப்போது கேட்பீர்கள் என ஆவலாக இருக்கிறேன். இது நிச்சயம் எல்லோரையும் மயக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!