பாக்கியலட்சுமி தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி, தனது குழந்தையின் முகத்தைக் காட்டும் வகையிலான புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ரித்திகா. இதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என அடுத்தடுத்து நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி தொடரின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இத்தொடரில் அம்ரிதா என்ற பாத்திரத்தில் பல நடிகைகள் தற்போது மாறியிருந்தாலும், முதலில் ரித்திகாவே இந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தத் தொடரில் கிடைத்த புகழின் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். கேபிஒய் பாலா உடன் சேர்ந்து இவர் பங்கேற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வினு என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் குழந்தை உடன் இருக்கும் படங்களை வெளியிட்ட ரித்திகா, முதல்முறையாக தற்போது குழந்தையின் முகத்தைக் காட்டும் வகையிலான படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கணவர் உடன் குழந்தையை வைத்துக்கொண்டு, தனது ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஒவ்வொரு வலியும் பாடம்... சோகத்தை புன்னகையுடன் பகிர்ந்த சிறகடிக்க ஆசை நாயகி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.