முகப்பு
செய்திகள்

ரசிகர்களுக்கு ரெட்ரோ பிடிக்கும்: கார்த்திக் சுப்புராஜ்

ரெட்ரோ குறித்து கார்த்திக் சுப்புராஜ்...

Updated On : 16 ஏப்ரல், 2025 at 10:54 AM
பகிர்:

ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

Advertisement

படத்தின் டிரைலர் வருகிற ஏப். 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ரெட்ரோ திரைப்படம் 90-களில் நடப்பதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. நான் இயக்கிய பேட்ட படத்திற்குப் பின் ரசிகர்களை அதிகம் கவரும் திரைப்படமாக ரெட்ரோ இருக்கும் என நினைக்கிறேன்.

திரையரங்க ரசிகர்களுக்காகவே நகைச்சுவை மற்றும் உணர்ப்பூர்வமான படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பிற்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.