டூரிஸ்ட் பேமிலி போஸ்டர் 
செய்திகள்

ஆச்சாலே... டூரிஸ்ட் பேமிலி இரண்டாவது பாடல் வெளியீடு!

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் முகை மழை என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவை கலந்துபேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தின் இரண்டாவது பாடலான ’ஆச்சாலே’ இன்று வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வருகின்ற மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

எளிய பின்னணியில் இருந்து பிக் பாஸ் சென்ற ரம்யா ஜோ! யார் இவர்?

அரிகாற் பெரும் பயறு

கம்பனின் தமிழமுதம் - 64: மனைவியால் வரும் மாண்பு!

ஏக்கறவு என்னும் ஒரு சொல்

SCROLL FOR NEXT