சான்வி மேக்னா நடித்த தெலுங்கு பட போஸ்டர். படம்: எக்ஸ்/ சித்ரவாகினி.
செய்திகள்

பிறருக்காக வாழாதீர்கள்..! குடும்பஸ்தன் நாயகி பகிர்ந்த நெகிழ்ச்சியானப் பதிவு!

நடிகை சான்வி மேக்னா தனது புதிய படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகை சான்வி மேக்னா தனது புதிய படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலம் தமிழில் கவனம் பெற்ற நடிகை சான்வி மேக்னா தெலங்கானாவைச் சேர்ந்தவர்.

பிட்ட கதலு, புஷ்பக விமானம், பிரேம விமானம் படங்களின் மூலம் புகழ்ப்பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் டுக் டுக் என்ற தெலுங்கு படம் வெளியானது.

சு.சுப்ரீத் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகை சான்வி மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

உண்மையான உணர்வுகள்! இந்தப் படத்தின் கதையைக் கேட்டபிறகும், ஸ்கிரிப்டை படித்த பிறகும் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனக்கு குறைவான நேரமே இருந்தாலும், படம் அளிக்கும் சந்தோஷத்தில் பங்குபெற நினைத்தேன். டுக் டுக் மிகவும் ஸ்வீட்டான படம். இதில் பங்குபெற்றதுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

படம் எப்படி ஓடுகிறது என்பது நடிகர்/நடிகைகளிடமோ இயக்குநர்களிடமோ இல்லை. நம்முடைய உழைப்பை மட்டுமே கொடுக்க முடியும். இந்தப் படத்தினால் எனக்கு நடனம், புதிய வட்டார மொழிபேசவும் பட்டாம்பூச்சி போன்ற ஷில்பா கதாபாத்திரத்தை புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. அவள் தன்னுடைய கொள்கைகளில் சுதந்திரத்தில் உறுதியாக இருந்தாள். பிறருக்காக வாழாதீர்கள். எறும்பு எப்படி வாழ்கிறது எனக் கேள்வி கேட்காதீர்கள்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது சேறு, மழையில் நடனாமாடியதையும் அதிக நேரம் வசனத்தை பேசியதையும் சிறிய, அழகான தாக்கத்தை ஏற்படுத்தியதிற்கும் என படம் முழுவதும் மகிழ்ச்சியாகப் பயணித்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT