செய்திகள்

ஹார்ட் பீட் - 2 வெப் தொடர்: வெளியீடு எப்போது?

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரின் வெளியீடு தொடர்பாக...

DIN

ஹார்ட் பீட் இணையத் தொடர் 2 ஆம் பாகத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளிட்டவற்றை மையக்கருவாக வைத்து இத்தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ஒளிபரப்பப்பட்ட ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட் இணையத் தொடர் மே மாத இறுதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: ’நீ நான் காதல்’ நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT